இன்றும் என்றும் நல்வாழ்வுக்கு மூச்சுப் பயிற்சிகள்

Dear All,

GLTS has been organising lot of virtual speech and the guest speaker for the first session was டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன், Medical University of South Carolina & PranaScience Institute, USA, Title: இன்றும் என்றும் நல்வாழ்வுக்கு மூச்சுப் பயிற்சிகள். This session was held on 19th April 2020 @ 5.00pm and the event was a huge success with all the participants finding the inputs from the speaker informative and useful.

டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் அமெரிக்காவிலுள்ள தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இவர் கதிரியக்கத்தால் புற்றுநோயைக் குணமாக்கும் முறைகளைப் பற்றி ஆராய்ந்துவருகிறார். அதோடுமட்டுமன்றி யோகப் பயிற்சி முறைகளால், குறிப்பாக மூச்சுப் பயிற்சியால் (பிராணாயாமத்தினால்) உடல் மற்றும் மனதுக்கு விளையும் நன்மைகளைப் பற்றியும், புற்றுநோய், மற்றும் இதர நோய்களில் இப்பயிற்சிகளின் பயன்பாடுகளையும், அவற்றின் அறிவியல் அடிப்படைகளையும் ஆராய்ச்சி செய்கிறார். திருமூலர் எழுதிய திருமந்திரத்திலிருந்து மூச்சுப் பயிற்சிகளை ஆய்வு செய்து, அவற்றைச் செய்யும்போது உமிழ்நீரில் ஏற்படும் வேதிமாற்றங்களை முதன்முதலாக எடுத்துக் காட்டியவர். தற்போது அப்பல்கலைக் கழகத்தில் திருமூலர் பெயரால் ஒரு தமிழ் இருக்கையை ஏற்படுத்தித் தமிழர்களின் அறிவியலை ஆராய்ச்சி செய்ய முனைந்து வருகிறார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று தமிழர்களின் மூச்சுப் பயிற்சியையும் அவற்றின் பின்னுள்ள அறிவியலையும் தனது உரைகளாலும், பட்டறைகளாலும், பயிற்சித் திட்டங்களாலும் பரப்பி வருகிறார். இவரது TEDx உரை சுமார் 775,000 முறை பார்வையிடப்பட்டு இத்துறையில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

Sundar compiled popular Pranayama techniques, their ingeniously modified variations, and some brand-new exercises stemming from the ancient Siddha wisdom in his book. His book is available to purchase from below link:

https://www.amazon.co.uk/Mind-Your-Breathing-Pranayama-Exercises-ebook/dp/B07WSBS5S4

On Behalf of GLTS Team